வரலாறு

குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலையம். நாவாந்துறை

 

கோவில் கண்ட தீவு சிறிய முன்னுரையுடன்!  

krusadi 3

 

                                               குமரிக்கண்டம் என்றும், லெமூரியா கண்டம் என்றும், அழைக்கப் பட்ட பரந்த பூமி யில், பழங்கா லத்துப் பைந்தமி ழன் பாராண்டான்! இயற்கை அன்னை யின் கடுங்சீற்றம், கடற்கோள்களாகவும், பூமி அதிர்ச்சியா கவும் வெளிப்பட்ட போது, குமரிக்கண்டம் அழுது புலம்பி இறுதியில் கடலன் னையின் கால‌டியில் அமைதியாக உற ங்கிவிட் டது, அத் தோடு தமிழனின் பொற்காலம் மங்கி மறைந்தது. சிதைந்து சின்னாபிண்ண மாகிப்போன குமரி க்கண்டம், சிறிதும், பெரி துமான‌ தீவுகளையும், மணல் திடல்களையும், ஆங்காங்கே விட்டுவைத்தது. அதில் ஒரு சின்னஞ்சிறு தீவு தான் இந்த குருசடித்தீவு.

நாவாய், கட்டு மரம். வள்ளம், வத்தை இவை களின் உதவியுடன் அழகான யாழ் கடல் நீர் ஏரியில் மீன் பிடித்து ஜீவனம் நடத்திய கொக்குவில், சாவல் காடு,சில்லாலை, மாதகல், மானிப்பாய், பண்டத்தரி ப்பு  ஆணைக் கோட்டை போன்ற பகுதியில் இருந்து வந்த யாழ் குடா நாட்டு மீனவர்கள், இந்த சின்னஞ்சிறிய தீவில் தம் களைப்பு தீர,  இரவில் படுத்துறங்கி, தொழில் புரிந்து வந்த னர்.  அதேவேளை அத்தீவில் தொழில் புரிந்து வந்த திரு, அந்தோனி இசிதோர் என்பவர் அத்தீவில் புனித அந்தோனிய ருக்கு தன் சொந்த முயற்ச்சியால் சிறிய ஆலையம் ஒன் றைக்கட்டினார்.

அந்த கோவில் அங்கு தங்கி மீன் பிடித்த மீனவர்களுக்கு வழிபாட்டு இடமாகவும், இளைப்ப றூம் இட மாகவும் மாறி யது.  பெரியவர் அந்தோனி இசி தோர் அவர் கள் புனித அந்தோனியாருக்கு விழா எடுத்து சிறப்பிக்க முயன்ற போது அயல் கிரா மத்து மக்கள்,  அந்தோனி இசிதோர் அவர்களின் கோவிலை அப்புறப்படு த்தவேண்டும் என் றும், அவர் தமக்கு சொந்தமான தீவை ஆக்கிரமித்த தாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை தனியொரு மனி தானக நீதிமன்றில் வாதா டினார். அந்தோனியார் கோவில் மீனவர்களுக்கு பயணளிக் கின்றது,  மத வழிபாடு செய்கின்றார்கள் எனவே அத்தீவில் பெரியவர் அந்தோனி இசிதோர்  கட்டிய கோயிலை அப்புறப் படுத்த முடி யாது என சட்டத்தரணி சாம்சபாபதி, பிரபல வழ க்கறிஞர் திரு, ஜீ. ஜீ. பொன்னபம்பலம் இவர்கள் பெரியவர்  அந்தோனி இசிதோர் அவர்களுக்காக வாதாடினார்கள்  இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவருக்கு   சார் பாக  தீர்ப்பளித்தது.பின்னர் இக்கோவிலை பரிபாலிக்கும் பொறு ப்பை  பெரியவர் அந்தோனி இசிதோர் அவர்கள் நாவாந் துறை  சென் மேரிஸ் பங்குமக்களிடம் கையளித்தார்.  பெரி யவர் அந்தோனி இசிதோர் என்ற அந்த மனிதனின் விடாமு யற்ச்சியால் இது சாத்தியமாகியது. அந்த தீவில் அருள்பாலி க்கும் புனித அந்தோனியார், திருமுகத்தில் விழித்துப் போ னால் நிறைய மீன்படும் என்ற மீனவர்களின் நம்பிக்கை வளர்ந்து பின்னர் அத் தீவில் புனித அந்தோனியருக்கு விழா எடுத்து மகிழ்ந்தனர், மீனவர்களும், புனித அந்தோனியார் பக்தர்களும். பின்னர் இலங்கை மண்ணில் வெடித்த கொடூர யுத்தத்தினால் இந்த சின்னஞ்சிறிய தீவு கண்ணி வெடிகள் விதைக்கப்பட்ட பாதுகாப்பு அரணரக‌ மாறியது. திரு,அந் தோனி  இசிதோர் அவர்கள் கட்டிவைத்த சின்னஞ்சிறு ஆலையம் கவனிப்பாரற்று சிதைவடந்து இருந்தது. இப் போது இக்கோவில் பெரியவர் இசிதோர் அவர்களின் பிள் ளைகள், பேரப்பிள்ளைகளின் பெரும்பான்மை நிதி உதவி யோடும், ஊர்மக்களின் சிரமதானப்பணிகள் மூலமாகவும்,  பங்கு தந்தையின் மற்றும்கன்னியர்கள்வழிகாட்டல் ஊடா கவும்  தற்போது கம்பீர மாக  உங்கள் முன் காட்சி அளிக்கி ன்றது.  நன்றி. (விரிவான வரலாறு மீண்டும் எழுதப்படும்)